HDB நடைபாதையில் திடீரென தீப்பிடித்த மொபிலிட்டி எய்ட்…!! காரணம் என்ன..??
சிங்கப்பூர்: ஹவ்காங் பகுதியில் உள்ள ஒரு HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தள நடைபாதையில் மொபிலிட்டி எய்ட் (PMA) ஒன்று தீப்பிடித்த சம்பவம் நடந்தது.
இச்சம்பவம் நேற்று முன்தினம்(11.12.25) காலை 11 மணியளவில் ஹவ்காங் தெரு 21, பிளாக் 231 அருகே நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டிக்டோக் பயனர் ஜோஷ்டக் வெளியிட்ட காணொளியில், மொபிலிட்டி எய்டின் சக்கரங்கள் தீப்பிடித்து அடர்ந்த புகை வெளியானதும், அந்த உதவிப் பொருள் கடுமையாக எரிந்ததும் பதிவாகியுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில்,அசல் அல்லாத பேட்டரிகளை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது என்றும், மொபிலிட்டி எய்டுகளை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வேண்டாம் என்றும் சிவில் பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மின்சார உதவிப் பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் https://go.gov.sg/bedevicesafe என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.