சிங்கப்பூரில் உள்ள பார்கள், ஹோட்டல்கள் மற்றும் இரவு உணவு விடுதிகள் உள்ளிட்ட உரிமம் பெறப்பட்ட பொது பொழுதுபோக்கு இடங்களில் கலைஞர்கள் நிகழ்ச்சிகள் நடத்த அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு பணியில் அமர்ந்து மனிதவள அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருந்தது.
ஆனால் இதில் பணியில் அமர்த்தப்படும் கலைஞர்களை முறையான உரிமம் பெற்று செயல்படாத சில பொது பொழுதுபோக்கு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
மேலும் புதிய திட்டத்தை மனிதவள அமைச்சகம், அடுத்த ஆண்டு (2026) ஜூன் 1 முதல் அமலுக்கு கொண்டு வர உள்ளது. இந்நிலையில் பணி அனுமதி நிகழ்ச்சி கலைஞர் திட்டத்தை ரத்து செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்திற்கு இனிமேல் புதிய விண்ணப்பங்களை அதிகாரிகள் ஏற்கமாட்டார்கள். மேலும் ஏற்கனவே அனுமதி பெற்ற வெளிநாட்டு கலைஞர்கள் அவர்களின் அனுமதிகள் காலம் முடியும் வரை அல்லது ரத்து செய்யப்படும் வரை தொடர்ந்து பணியாற்றவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வணிகங்கள் சேவை வழங்குனர்கள் மூலம் கலைஞர்களை எதிர்காலத்தில் பணியமர்த்த அல்லது தகுதி வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான பொதுப்பணி அனுமதி வழக்கும் விண்ணப்பிக்க முடியும் என MOM அமைச்சகம் கூறியுள்ளது.