உலக அளவில் தற்போது பொறியாளர்களுக்கான ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் பகுதி மின் கடத்தித் துறை மேலும் சில பெண்களை வேலையில் சேர்ப்பதற்கு தற்போது முனைப்பு காட்டி வருகிறது.
இன்னும் சில பெண்கள் தொழில்நுட்ப வேலைகளையும் அதிலும் தலைமைத்துவ பொறுப்புகளையும் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
தற்போது தற்காலிகமாக வேலையில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்ட பெண்களை இந்த துறையில் சேர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று துணை அமைச்சர் ரஹாயூ மஹ்சாம் கூறியுள்ளார்.
பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவு உருமாற்றம், வழிகாட்டுதல், உபகாரச் சம்பளம் போன்ற முறைகளில் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் அதன் மூலமாக மின்கடத்தை துறையின் எதிர்காலம் முன்னேற வழி உண்டு என்றும் கூறியுள்ளார்.
இந்த தகவலை சிங்கப்பூர் பகுதி மின் கடத்தித் துறை சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் வேலை மாறி பொறியாளர் துறையில் சேர்ந்தவர்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கு அதிகமானோர் பெண்களே ஆவர். இதனால் மின் கடத்தித் துறை சங்கமானது மேலும் எண்ணிக்கையை அதிகரிக்க தற்போது விரும்புகிறது.