சிங்கப்பூரில் NBA ரைசிங் ஸ்டார் இன்விடேஷனல் போட்டி ஆரம்பம்..!! எப்போது..??

சிங்கப்பூரில் NBA ரைசிங் ஸ்டார் இன்விடேஷனல் போட்டி ஆரம்பம்..!! எப்போது..??

சிங்கப்பூரில் NBA ரைசிங் ஸ்டார் இன்விடேஷனல் போட்டியானது தொடங்க உள்ளதாக தேசிய கூடைப்பந்து சங்கம் (NBA) இன்று (ஏப்ரல் 15) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் விளையாட்டு மன்றம்(SportSG) மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும். இது NBA சிங்கப்பூரின் நிகழ்வு அமைப்பால் நடத்தப்படும் இரண்டாவது வருடாந்திர போட்டியாகும்.

இந்த போட்டியானது ஆசிய-பசிபிக் நாடுகளை சேர்ந்த உயர்நிலைப்பள்ளி ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை சிங்கப்பூரில் போட்டியிட ஒன்றிணைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆண்கள் அணிகளும் 12 பெண்கள் அணிகளும் முதலில் ஒரு ரவுண்ட் ராபின் போட்டியிலும் அதனைத் தொடர்ந்து ஒற்றை வெளியேற்ற போட்டியிலும் போட்டியிடும்.

உள்ளூர் கூடை பந்து சங்கங்கள் மற்றும் லீக்குகளின் ஒத்துழைப்பின் மூலமாக அங்கே இருக்கும் அணிகள் தேர்வு செய்யப்படும். மெல்போர்ன், தைபே, டோக்கியோ மற்றும் பாங்காங் ஆகிய இடங்களில் நடைபெறும் குழுநிலைப் போட்டிகளில் இருந்து தகுதி பெரும் அணிகள் உருவாகும். போட்டியை நடத்தும் நாடான சிங்கப்பூர் ஒவ்வொரு குழுவிற்கும் 2 அணிகளை அனுப்பும்.

பங்கேற்கின்ற வீரர்கள், திறன் மேம்பாடு, கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் சமூகப் பொறுப்புத் திட்டங்கள் தொடர்புடைய ஆடுகளத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள் என்று NBA தெரிவித்திருக்கிறது.

இந்த போட்டிகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், எதிர்கால NBA கூடைப்பந்து மேம்பாட்டு முகாம்கள் திட்டங்கள் மற்றும் பிற செயல்பாடுகளில் பங்கேற்ற வாய்ப்பு பெறுவார்கள்.

இந்நிகழ்வுகளில் சீன வம்சாவளியச் சேர்ந்த அமெரிக்க கூடைப்பந்த வீரரான ஜெர்மி லின் மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கூடை பந்த வீராங்கனை ஆன லாரன் ஜாக்சன் ஆகியோர் இந்த ஆண்டு (2026) நடைபெறும் NBA ரைசிங் ஸ்டோர்ஸ் இன்விடேஷனல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடுவார்கள்.

மேலும் NBA ரைசிங் ஸ்டோர்ஸ் இன்விடேஷனல் அழைப்பு போட்டியானது ஸ்போர்ட்எஸ்ஜி, சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் மற்றும் கரீம் குடும்ப அறக்கட்டளை ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்ட நடத்தப்படுகிறது இந்நிகழ்ச்சி குறித்த அண்மை தகவல்களுக்கு பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் போட்டியானது ஜூன் மாதம் மீண்டும் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. மேலும் இந்தப் போட்டி சிங்கப்பூரில் உள்ள OCBC மைதானத்தில் ஜூன் 22 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK