செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!!

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், கால்நடை மருத்துவர்களுக்கான புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளனர். ‘பிராபி’ (Broby) எனப்படும் இந்த கருவி, மருத்துவ ஆலோசனைக் குறிப்புகளையும் ஆராய்ச்சி ஆவணங்களையும் தானாக உருவாக்கும் திறன் கொண்டது.

மாணவர்கள் ஹ்யுகா கராமோச்சி மற்றும் கேலப் யாப், தங்கள் செல்ல நாய்களின் அனுபவத்திலிருந்து இந்த யோசனையை உருவாக்கினர். முதலில், காயங்களை நக்குவதைத் தடுக்க கசப்பான கழுத்துப்பட்டையை உருவாக்க நினைத்தனர்.

ஆனால் அது வெற்றி பெறவில்லை. பின்னர், விலங்கு மருத்துவர்கள் எழுதும் ஆவணங்களில் செலவாகும் நேரத்தை குறைக்க முடியும் எனக் கருதி, செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட தீர்வை உருவாக்கினர்.

இவர்களுக்கு நிரலாக்கத் திறன் இல்லாதபோதும், தாமாகவே கற்றுக்கொண்டு நண்பர்களின் உதவியுடன் இந்த கருவியை வடிவமைத்தனர். “பணம் அல்ல, செல்லப் பிராணிகளின் பராமரிப்பை எளிதாக்குவதே எங்கள் நோக்கம்,” என அவர்கள் தெரிவித்தனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK