சிங்கப்பூரில் இல்லப் பணி பெண்களின் வேலை அனுமதியை புதுப்பிக்க புதிய நிபந்தனைகள்..!!
சிங்கப்பூரில் வேலை செய்யும் இல்ல பணிப்பெண்களின் வேலை அனுமதியை புதுப்பிக்க சில முக்கிய நிபந்தனைகள் உள்ளது என்பதை மனித வள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார். முக்கிய நிபந்தனைகள்: 👉சிங்கப்பூரில் பணிபுரியும் இல்ல பணிப்பெண்களின் வயது முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். 👉பணிப்பெண்களின் அனுமதி அட்டை காலாவதி ஆவதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அதை புதுப்பிக்க MOM வேலையில் வைத்திருக்கும் முதலாளிக்கு கடிதம் அனுப்பும்.
👉தகுதி பெறும் முதலாளிகளுக்கு இந்த கடிதம் அனுப்பப்படும் என கூறியுள்ளார். 👉 முதலாளியால் இல்லத்தில் வேலை செய்யும் பணி பெண்களை வேலையில் வைத்திருக்க முடியுமா? மற்றும் கவனித்துக் கொள்ள முடியுமா? என்பது குறித்து மனிதவள அமைச்சும் ஆராய்ந்து வருகிறது. 👉 பணிப்பெண்களைத் தொடர்ந்து இல்லத்தில் வேலையில் வைத்திருக்க விரும்பும் முதலாளிகள் நிச்சயமாக மருத்துவ தனிப்பட்ட விபத்து காப்பருவிகள் மற்றும் பாதுகாப்பு காப்புறுதி ஆகியவற்றை வங்கிய அல்லது காப்பருவியை நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும்.
👉 இந்த விவரங்கள் MOM ஐ சென்றடைய மூன்று நாட்கள் அவகாசம் ஆகும். 👉 அதற்குப் பிறகு முதலாளிகள் வேலை அனுமதி புதுப்பிக்கும் விண்ணப்பத்தினை MOM இடம் சமர்ப்பிக்க வேண்டும்.