சிங்கப்பூரில் பதவியேற்றார் புதிய அமெரிக்க தூதர்..!!! யார் தெரியுமா..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தூதர் டாக்டர் அஞ்சனி சின்ஹா, நேற்று (17.11.25)இஸ்தானாவில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்தை சந்தித்து தனது நற்சான்றிதழ்களை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.
டாக்டர் சின்ஹா எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் விளையாட்டு மருத்துவத்தில் பல சதாப்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
அவர் இந்தியாவில் உள்ள MGM மருத்துவப் பள்ளி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.அங்கு எலும்பியல் அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார்.
தனது தொழில் வாழ்க்கையில், அவர் நியூயார்க்கில் 8 இடங்களில் சிறப்பு பயிற்சிகளை உருவாக்கி வழிநடத்தினார் மற்றும் புளோரிடாவில் மூத்த அறுவை சிகிச்சை ஆலோசகராக பணியாற்றினார்.
மருத்துவ துறையில் பெற்றுள்ள அவரது சிறந்த தேர்ச்சி மற்றும் திறமை, தற்போது அரசியல்-தூதர்துவத்திலும் அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.
அதிபர் தர்மன் சண்முக ரத்தினம், அமெரிக்காவின் புதிய தூதருடன் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியானது என்று தெரிவித்து, இரு நாடுகளுக்கும் முக்கியமான குறிக்கோள்கள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகளைப் பற்றி விரிவாக பேசினார்.
டாக்டர் சின்ஹா, சிங்கப்பூரில் அமெரிக்காவின் பிரதிநிதராக பதவியேற்பதற்கான தங்கள் உறுதிமொழியையும், இரு நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்க்கும் இலக்கையும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சி, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை மேம்படுத்தும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.