பயணிகளே..!! இனி ரயில் தாமதங்களை அறிய புதிய தகவல் வசதி..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ரயில் சேவைகளில் ஏற்படும் தாமதங்களை பொதுமக்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில், நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று(13.12.25) மாலை 6 மணிக்கு புதிய இணைய வசதியை அறிமுகப்படுத்துகிறது.
அதன்படி பொதுமக்கள் MRT மற்றும் LRT சேவைகளின் தாமதம் குறித்த தகவலை mytransport.sg/trainstatus என்ற அதிகாரப்பூர்வ லிங்க் மூலம் தற்போதைய நிலையை பயணிகள் நேரடியாக பார்க்க முடியும்.
இந்த வசதி இரண்டு நிறங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.அரை மணி நேரத்திற்கும் குறைவாக உள்ள தாமதங்கள் மஞ்சள் நிறமாகக் காட்டப்படும்.இத்தகைய தாமதங்கள் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்படாது.
அதே நேரத்தில், இரண்டு மணி நேரத்துக்கு மேலான பெரிய தாமதங்கள் ஆரஞ்சு நிறமாக குறிப்பிடப்பட்டு, நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களின் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.