பரபரப்பு..!!ஸ்கூட் விமானத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட தொந்தரவு..!!!
சிங்கப்பூர்: பினாங்கிலிருந்து சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானத்தில் பயணித்த சிலர், தோலில் அரிப்பு, சிவப்பு மற்றும் வீக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் மூட்டைப்பூச்சிகள் கடித்ததாக சந்தேகித்தனர்.
இந்த சம்பவம் அக்டோபர் 19 அன்று நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சிவத்தல் மற்றும் வீக்கம் முக்கியமாக தொடை பகுதியில் காணப்பட்டது.
ஸ்கூட் ஏர்லைன்ஸ், பயணிகள் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொண்டு உடனடியாக விசாரணை தொடங்கியதாக தெரிவித்துள்ளது. ஆய்வில், விமான கேபினில் பூச்சிகள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இனிமையான பயண அனுபவத்தை உறுதி செய்வது எங்கள் முக்கிய குறிக்கோள். அனைத்து விமானங்களிலும் ஆழமான சுத்தம் மற்றும் பூச்சிக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுகின்றன,” என வலியுறுத்தியுள்ளது.