சிங்கப்பூரில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்து மின்னஞ்சல்கள் மூலம் செய்திகளை அனுப்பி அதன் மூலம் பணம் பெறும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்னஞ்சல்கள் மூலம் போலியான ஆய்வு அறிவிப்பை சுங்கத்துறை அதிகாரிகள் போல sgpcustoms648171@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் மோசடி செய்து ஏமாற்றி வருகின்றனர்.
தங்க கட்டிகளின் புகைப்படத்தை சுங்கத்துறை அதிகாரிகள் போல் சுகத்துறை ஆய்வு ஒப்பந்தம் படிவத்தை முதலில் அனுப்பி வைக்கிறார்கள்.
பிறகு அந்த சுங்கத்துறை ஆய்வு ஒப்பந்தல் படிவத்தை நிரப்பி பணத்தை திரும்ப பெறுவதற்கு மலேசியா வங்கி கணக்கில் சரிபார்க்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற விவரங்களை வழங்கி பணத்தை பெற முயற்சி செய்து வருகிறார்கள்.
இது ஒரு குறிப்பிட்ட காலக்கெடு கொடுத்து அனுப்பப்பட்டது ஆனால் காலக்கிட நெருங்கும்போது மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பணத்தை அனுப்ப வேண்டும் என்று மிரட்டி மற்றொரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர் அப்படி பணம் அனுப்பவில்லை என்று கூறியவர்களுக்கு மலேசிய காவல்துறைக்கு அறிவித்து கடத்தல் கைது நடவடிக்கைகளை தொடங்கப்படும் எனவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களை பயன்படுத்தி மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்களையும் சரி பார்க்க சுங்கத்துறையை தொடர்பு கொண்டனர்.
மற்றொரு மோசடியில் whatsapp மூலமாக தங்க கட்டிகளின் புகைப்படங்களையும் சிங்கள யோகாவை கொண்ட போலியானத்தையும் தயார் செய்து தவறான விவரங்களை கொண்டது என்று அனுப்பி பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டது போல் உருவாக்கி ஆழ் மாறாட்டம் செய்து பணத்தை பெறுவதற்கு முயற்சித்து வந்தனர்.
இதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர் அதாவது பார்சல் டெலிவரிக்கு சுங்கத்துறை பணம் எப்போதும் வாங்கப்பட மாட்டாது எனவும் @customs.gov.sg என்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் மட்டுமே பொது மக்களை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்பு கொள்வது என பொதுமக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களை அதிகாரிகள் தொடர்பு கொள்ள whatsapp மின்னஞ்சல் முகவரிகள் பிற சமூக ஊடகங்களை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் அரசு ஊழியர்கள் தொலைபேசி எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் பொதுமக்களிடமிருந்து பணம் அல்லது வங்கி விவரங்களை எப்போதும் கேட்க மாட்டார்கள்.
இது போன்ற மோசடி வழக்கில் மின்னஞ்சல்கள் மற்றும் வாட்சப் செய்திகள் மூலம் எந்த ஒரு குறுஞ்செய்திகள் மக்களுக்கு வந்தால் உடனடியாக பொதுமக்கள் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.