சிங்கப்பூரில் வாழும் தம்பதியருக்கு சிறை தண்டனை..!! நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் வாழும் தம்பதியருக்கு சிறை தண்டனை..!! நடந்தது என்ன..??

சிங்கப்பூர்: 2022 ஆம் ஆண்டில் இங்(60) என்பவர் செங் கெங் தியோங் என்பவரை சந்தித்தார். கீத் என்ற அடையாளம் தெரியாத நபருக்கு கள்ளப்பணம் பரிமாற்றம் செய்ய செங் உதவி கேட்டுள்ளார். இதற்கு இங் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த வேலையில் அவரது மனைவியையும் வேறு சிலரையும் இங் உதவிக்காக சேர்த்துக் கொண்டார்.

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை காதல் வலையில் சிக்கிய ஏமாந்த 74 வயது மூதாட்டியிடம் பெற்ற சுமார் $1.1 மில்லியன் பணத்தை பிட்காயின் (Bitcoin) ஆக மாற்றுவதற்கு இங் அவரது மனைவியுடன் சேர்ந்து உதவியுள்ளார்.

இதற்கு அவருக்காக 3% கட்டணம் கிடைத்ததாக தெரியவந்தது.

மொத்தமாக இங் கிட்டத்தட்ட $1.66 மில்லியன் கள்ள பணத்தை பிட்காயின் ஆக மாற்றுவதற்கு உதவியதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்புடைய விசாரணை முடிந்து ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இறுதியாக குற்றம் நிரூபிக்கப்பட்டது.

அண்டனி இங் ஸி சின்னுக்கு(53) 6 ஆண்டுகள் 4 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவரது மனைவிக்கு 6 ஆண்டுகள் 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK