சிங்கப்பூரில் ரயில் பாதைகள் மூடப்படும்: அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்

சிங்கப்பூரில் ரயில் பாதைகள் மூடப்படும்: அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்

சிங்கப்பூரில் உள்ள ரயில் பாதைகள் பழையதாகி வரும் நிலையில் இருப்பதால் புதுப்பிக்க முடிவெடுத்துள்ளதாக தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சியாவ் கூறியுள்ளார்.

அதிக ராயல் பாதைகள் மேம்பாட்டு பணிகளுக்காக மூடப்படும் எனவும் ரயில் பாதை கட்டமைப்பில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மேம்பாட்டு பணிகள் ஆனது இரவுதோறும் 3.5 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்படும்.

ரயில் பாதைகளை திட்டமிட்டு மூடும் பொழுது அதை பழுது பார்க்கும் பணிகளையும் விரைவாக முடிப்பதற்காக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கான ரயில் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கப்படும் நேரம் குறைவாக உள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.

பெரிய மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு அதிக நேரம் தேவைப்படும். போக்குவரத்து ஊழியர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை கவனத்தில் கொண்ட பயணிகள் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK