தற்பொழுது சிங்கப்பூர் செல்ல சிறந்த வழி எது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல சிறந்த வழி எது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

தற்பொழுது பலர் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இப்பொழுது அதிகம் கிடைக்கும் வேலை வாய்ப்பு
👉E.pass
👉Nts pass
👉S.pass

இந்த மூன்று பாசுமே சிங்கப்பூர் செல்ல சிறந்த பாஸ்கள் தான். ஆனால் இதில் ஒவ்வொரு பாசிலும் உள்ள ஒரு சில நன்மை தீமைகளை இந்தப் பதிவில் காணலாம்.


1. E Pass
💠இந்த பாசில் நீங்கள் செல்லும் பொழுது உங்களிடம் ஏஜெண்டுகள் அதிக பணம் கேட்பார்கள்.
இதில் ஒரு சில வேலைகளுக்கு சம்பளமும் சற்று குறைவாக இருக்கும். ஆனால் ஒரு சில வேலைகளுக்கு நல்ல சம்பளம் தருகிறார்கள்.

💠இந்த வேலைக்கு நீங்கள் செல்லும் பொழுது சம்பளம் சற்று அதிகமாக இருந்தால் சிறப்பு அதே போல் இந்த வேலைக்கு தங்குமிடமும் கம்பெனி கொடுத்தார்கள் என்றால் தாராளமாக செல்லலாம்.

💠தங்குமிடம் தரவில்லை என்றால் அதற்கான பணத்தை தந்தால் சரி இல்லை என்றால் நீங்கள் தங்குவதற்கு உங்கள் சம்பளத்திலிருந்து மிகவும் பெரிய தொகை செலவாகும்.


💠இந்த வேலைக்கு செல்லும் பொழுது ஒரு சில கம்பெனிகள் உங்களது விசாவில் அதிக சம்பளம் போடுவார்கள் ஆனால் உங்கள் கையில் கொடுக்கும் சம்பளமும் குறைவாக இருக்கும்.

💠ஆனால் உங்கள் விசாவில் உள்ள சம்பளத்திற்கான வரியை நீங்கள் சிங்கப்பூருக்கு செலுத்தி ஆக வேண்டும்.

💠ஒரு சில கம்பெனிகள் வரியில் பாதி தொகையை தருவார்கள். அது போன்ற கம்பெனியை தேர்வு செய்வது சிறப்பு.

💠முழுத் தொகையும் நீங்களே கட்ட வேண்டும் என்றால் நீங்கள் 2000 முதல் 3000 வெள்ளி வரை வருடத்திற்கு கட்ட வேண்டியது வரலாம். அது உங்களுடைய இரண்டாவது, மூன்று மாதம் சம்பளத்தை குறிக்கும்.


💠எனவே நீங்கள் இந்த வேலைக்கு செல்லும் பொழுது உங்களுடைய வருட சம்பளம் எவ்வளவு அங்கு செலவாகும் என்று அனைத்தையும் கணக்கு பண்ணி இரண்டு வருடத்தில் தங்களிடம் எவ்வளவு லாபம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதன் பின் செல்வது சிறப்பு.

2. NTS Permit
🔶தற்பொழுது இதிலும் வேலைகள் வந்து கொண்டு தான் உள்ளது.
இந்த பாஸை தேர்வு செய்யும் பொழுது நீங்கள் உடனடியாக சிங்கப்பூர் செல்ல முடியும்.

🔶கம்பெனியில் கோட்டா இருக்கும் பட்சத்தில் MOM Approval உங்களுக்கு உடனடியாக கிடைக்கும்.

🔶இதற்கு ஏஜெண்டுகள் அதிக தொகை தான் சொல்கிறார்கள்.


🔶இந்த வேலைக்கு செல்லும் பொழுது நீங்கள் அதிக வரி பணம் கட்ட தேவையில்லை.

🔶ஆனால் இதில் அதிகமாக அனுபவம் வாய்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்புகள் வந்து கொண்டு உள்ளது.

🔶இதனால் அனுபவம் இல்லாதவர்கள் இந்த வேலைக்கு செல்வது மிகவும் கடினமாக உள்ளது.

🔶இந்த வேலை உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் அதை தவற விட்டு விடாதீர்கள்.

3. S.Pass

✳️தற்பொழுது உள்ள Pass ல் மிகவும் சிறந்தது என்றால் அது இந்த பாஸ்தான்.

✳️ஆனால் இதில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே வந்து கொண்டு உள்ளது.

✳️இந்த வேலைக்கும் நீங்கள் வரி அதிகம் கட்டத் தேவையில்லை.

✳️இந்த வேலையில் நல்ல சம்பளம் தருகிறார்கள்.


✳️இந்த வேலையிலும் அதிகமான அனுபவம் உள்ளவர்களையே எடுக்கிறார்கள். அதனால் அனுபவம் இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று கடினமாக உள்ளது.

✳️இந்த வேலைக்கும் ஏஜெண்டுகள் அதிகத் தொகையை கேட்கிறார்கள்.

✳️இந்த வேலைக்கு உங்களிடம் அனுபவம் வேண்டும் என்று கேட்டால் அந்த வேலை உங்களுக்கு நன்றாக தெரிந்தால் மட்டும் செல்வது சிறந்தது. இல்லை என்றால், உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK