சிங்கப்பூர் மக்களே…ரெடியா ..!! ஜனவரி 23 முதல் ஆரம்பம்…!!

சிங்கப்பூர் மக்களே...ரெடியா ..!! ஜனவரி 23 முதல் ஆரம்பம்...!!

சிங்கப்பூரில் குதிரை ஆண்டு நெருங்கி வந்து கொண்டிருப்பதால், சிங்போஸ்ட் நேற்று (20.01.26) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு புதிய செய்தியை அறிவித்து உள்ளது.

சிங்கப்பூர் போஸ்ட் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) முதல் அதனுடைய குதிரை ஆண்டு முத்திரைகளை விற்பனை செய்ய தொடங்க உள்ளதாக செய்தியை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய முத்திரைகளுக்கான வடிவமைப்புகளையும் வெளியிட்டு இருக்கிறது.

புகைப்படத்தில் உள்ள முத்திரையில் குதிரையின் சுறுசுறுப்பு, தைரியம் மற்றும் நேர்மறையான மனப்பாங்கு வெளிப்படுத்தும் எண்ணத்தில் சிங்கப்பூர் போஸ்ட் குதிரை ஆண்டு முத்திரையை வெளியிட்டு இருக்கிறது.

இதன் மதிப்பானது சென்ற ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் குதிரை ஆண்டு முத்திரைகள் இரண்டு மதிப்புகளை கொண்டிருக்கிறது.
📌62 செண்ட் முதல் உள்ளூர் முத்திரை
📌$2 முத்திரை


👉62 செண்ட் முதல் உள்ளூர் முத்திரை:
62 சென்ட் மதிப்புள்ள இந்த தபால் தலையில் வெள்ளை பின்னணியாக கொண்ட ஒரு நீல நிற குதிரை இடம் பெற்றிருக்கிறது. சீன ராசியில் ஏழாவது விளங்காக இடம்பெறும் இந்த முத்திரை முன்னோக்கி நடக்கும்போது ஆர்வத்துடன் சுற்றி பார்ப்பதை அழகான வெளிப்பாடாக குறிக்கிறது.

குதிரை தங்க நாணயங்கள் வடிவங்கள் மற்றும் பியோனி போன்ற பூக்கள் உள்ளிட்ட பல வண்ணமயமான வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

👉$2 முத்திரை:
இந்த முத்திரையானது தபால் தலையில் நீல நிற பின்னணியை கொண்ட ஒரு வெள்ளை குதிரையை சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளது. மிகவும் துடிப்பான அடையாளத்துடன் கூடிய ஒரு வெள்ளை குதிரையாக வடிவமைக்கப்பட்ட ஒரு குட்டியை சுமந்து முன்னோக்கி பாயும் விதத்தில் உள்ளது.

இந்த இரண்டு முத்திரைகளின் வடிவமைப்புகளும் சீன ராசியில் குதிரையின் சாகச மற்றும் துடிப்பான உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சந்திர புத்தாண்டு தபால்தலை சேகரிப்பு நிகழ்ச்சி:
இந்த மாதம் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சிங்கப்பூர் போஸ்ட் நிறுவனம் ஆனது சிங்கப்பூர் போஸ்ட் மையத்தில் அதனுடைய வருடாந்திர சந்திர புத்தாண்டு அஞ்சல் தலை கண்காட்சியை நடத்துவதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்த ரோடு ஷோவில் சிங்கப்பூர் போஸ்டின் 12 ராசியின் கருப்பொருளையும் முத்திரையில் காட்சிப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சேகரிப்பாளர்கள் இந்த ரோடு சோவிற்கான பிரத்தியேகமாக வரையறுக்கப்பட்ட பதிப்பு பொருட்களையும் வாங்க முடியும்.

இதனுடன் கூடுதலாக, குதிரை ஆண்டு நினைவு முத்திரைகளின் சேகரிப்பாளரின் பதிப்புகளையும் வழங்க உள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலவே நினைவு முத்திரைகள் பாரம்பரிய சீன காகித வெட்டுதலை நவீன வடிவமைப்புடன் விளக்கம் வண்ணத்தில் உள்ளது.

சேகரிப்பாளரின் பதிப்பின் விலை $19.15 மற்றும் எட்டு சிவப்பு உரைகளுடன் உள்ளது.

இந்த முழுமையான முத்திரைகள் மற்றும் குதிரை ஆண்டு சிறப்பு அஞ்சல் முத்திரையுடன் கூடிய முதல் நாள் அட்டையின் விலை $4.85 ஆகும். இரண்டு முத்திரைகள் கொண்ட நினைவுத்தொகுப்பின் விலை $5.35 ஏன்னா விற்கப்படுகிறது.

சீன புத்தாண்டு கருப்பொருளுடன் கூடிய இந்த குதிரை ஆண்டு முத்திரை கோப்புரையானது $22.20 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

வரும் வெள்ளி முதல் (ஜனவரி 23) பொதுமக்கள் அனைவரும் குதிரை ஆண்டு கருப்பொருள் முத்திரைகள் மற்றும் பரிசுகளை பொது தபால் அலுவலகம், தபால் தலை கடைகள், கிளைகள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர் shop.singpost.com என்ற இணைய பக்கத்தில் பொருட்களை ஸ்டாக் உள்ளவரை வாங்கலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK