வேகமெடுக்கும் RTS இணைப்பு பணிகள்..!! விரைவில் சேவை..!!
ஜோகூர் பாரு–சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பின் (RTS இணைப்பு) கட்டுமானப் பணிகள் வேகமாக முன்னேறி வருகின்றன. மொத்த திட்டமும் தற்போது 65 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்னேற்றத்தில், சிக்னல் அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின்சார வசதிகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளின் கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒரு திசையில் 1 மணி நேரத்திற்கு 10,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் இதற்குண்டு. உச்ச நேரங்களில் ஒவ்வொரு 3.6 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும் எனவும், இது தரைப்பாலத்தில் காணப்படும் வாகன நெரிசலை குறைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.