சிங்கப்பூரில் பாதுகாப்பு பணியாளர்களுக்கு உயரும் சம்பளம்..!! எவ்வளவு தெரியுமா..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் முற்போக்கான ஊதிய மாதிரியின் கீழ், அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,600க்கும் மேற்பட்ட முழுநேர மற்றும் பகுதிநேர நிறுவன பாதுகாப்புப் பணியாளர்கள் தொடர்ச்சியான சம்பள உயர்வைப் பெறவுள்ளனர்.
மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, பாதுகாப்பு முத்தரப்புக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.இதன் மூலம், நிறுவனத்தின் உள் பாதுகாப்புக் காவலர்களுக்கு ஆண்டுக்கு S$160 வரை சம்பள உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகக் குறைந்த பணிப் பட்டங்களில் பணிபுரியும் சுமார் 1,500 முழுநேர உள் பாதுகாப்புப் பணியாளர்களின் மாதச்சம்பளம் 2026 முதல் 2028 வரை படிப்படியாக குறைந்தபட்சம் S$2,475 வெள்ளியிலிருந்து S$2,795 வெள்ளி வரை உயர்த்தப்படும்.
மேலும், இந்த ஊதிய உயர்வுகளால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க அதிகாரிகள் முதலாளிகளுக்கு தேவையான ஆதரவையும் வழங்குவார்கள். தகுதியுள்ள நிறுவனங்கள் முற்போக்கான ஊதிய மாதிரியின் கீழ் தானாகவே மானியங்களைப் பெறும் வசதியும் பெறுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.