கேலாங் லோராங் பகுதியில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!! என்ன நடந்தது..??

கேலாங் லோராங் பகுதியில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர்:கேலாங் லோராங் 24 பகுதியில் ஒரு தம்பதியுடன் ஏற்பட்ட தகராறில், ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவிக்க முயன்றதாக இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
தம்பதியினரை தடிகளால் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் மீது இன்று (13.11.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, சம்பவம் 11 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் நடைபெற்றது.

முதற்கட்ட விசாரணையில், இரண்டு ஆண்கள் தம்பதியுடன் தகராறு செய்து அவர்களை தடிகளால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

நான்கு பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த ஆண் மற்றும் பெண் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து பிடோக் காவல் நிலையம் மற்றும் காவல் செயல்பாட்டுக் கட்டளை மையம் இணைந்து விசாரணை மேற்கொண்டது.

சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து,குற்றவாளிகளை நான்கு மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டு கைது செய்தது.

இருவரும் ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

காவல்துறை இம்மாதிரியான வன்முறை மற்றும் சட்டவிரோதச் செயல்கள் எதையும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK