பரபரப்பு..!!மரைன் பரேடில் நடந்த அதிர்ச்சி கொலை..!!
சிங்கப்பூர்: மரைன் பரேட் லகுனா பார்க் காண்டோவில் 68 வயது முதியவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (13.11.2025) மதியம் 12:45 மணியளவில் உதவி தேவைப்படுவதாக வந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மதியம் 1:10 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், காயமடைந்த நபர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.