சர்ச்சை வலைப்பதிவர் அமோஸ் யீக்கு மீண்டும் அதிர்ச்சி தீர்ப்பு..!!

சர்ச்சை வலைப்பதிவர் அமோஸ் யீக்கு மீண்டும் அதிர்ச்சி தீர்ப்பு..!!

சிங்கப்பூர்:அமெரிக்காவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சிங்கப்பூர் வலைப்பதிவர் அமோஸ் யீ (யூ பெங்ஷான்), பரோலில் விடுதலை பெற இருந்த நிலையில் மீண்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இல்லினாய்ஸ் சிறைத் தண்டனைத் துறை (IDC) தகவலின்படி, 27 வயதான யீக்கு நவம்பர் 7ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் புதுப்பிக்கப்பட்ட பதிவுகளின்படி, அவர் அதே நாளிலேயே மீண்டும் டான்வில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, பரோல் நிபந்தனைகளை மீறியதால் யீயின் விடுதலை தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் மீண்டும் காவலில் இருப்பதால், விடுதலை தேதி “மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சிறைச்சாலை புகைப்படங்களில், அவரது தலைமுடி தோள்பட்டை வரை நீளமாக காணப்படுகிறது.

அமோஸ் யீ 2015ஆம் ஆண்டு லீ குவான் யூவை அவமதித்ததற்கும் கிறிஸ்தவத்தை கேலி செய்ததற்கும் சிறைத் தண்டனை பெற்றார்.

பின்னர் 2017இல் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் பெற்றார்.எனினும் 2020இல், டெக்சாஸைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக கவர்ந்திழுத்து,நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்ட காரணத்திற்காக அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK