சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!!

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!!

பன்றி இறைச்சி துண்டுகள் எனும் பாக் குவா உணவை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் எடுத்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் சுற்றுலா சென்று திரும்பும் மக்கள் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றை சிங்கப்பூருக்கு வாங்கி வருவதற்கான அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா மட்டும் இன்னும் இடம்பெறவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.

ஜோகூரில் இருந்து பன்றி இறைச்சிகளைக் கொண்டு வருவதில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து மக்கள் சிலர் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டதை அடுத்து, சிங்கப்பூர் உணவு அமைப்பு ஜனவரி மாதம் 18ம் தேதி அதன் facebook பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டது.

ஜனவரி 18-ஆம் தேதி அன்று சிங்கப்பூர் உணவு ஆணையம் வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகள் தற்போது ஒரு நபருக்கு ஐந்து கிலோகிராம் வரை பன்றி இறைச்சியை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பதிவிட்டுள்ளது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg