G20 உச்சி மாநாட்டில் சிங்கப்பூர்..!! உலக ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம்..!!!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், ஜெர்மனி, நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார்.
அவர் ஜெர்மன் பிரதமர் மெர்ஸ், டச்சு பிரதமர் ஸ்கோவ், அயர்லாந்து பிரதமர் மார்ட்டின் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜெர்மன் பிரதமர் மெர்ஸுடன் நடந்த சந்திப்பில், இரு நாடுகளும் 60 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளையும், பொருளாதாரம், பாதுகாப்பு, சைபர் மற்றும் டிஜிட்டல் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர். இருவரும் ஆசியான்-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மை மற்றும் CPTPP (Trans-Pacific Partnership) மூலம் கூட்டுப்பணிகளை விரிவுபடுத்த முடியும் என தெரிவித்தனர்.
மேலும், பிரதமர் மெர்ஸின் சிங்கப்பூர் வருகை விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் வோங் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார்.
நெதர்லாந்து பிரதமர் ஸ்கோவுடன் நடைபெற்ற உரையாடலில், இரு நாடுகளும் 60 ஆண்டுகால உறவுகளை வலுப்படுத்தி, உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்.
அயர்லாந்து பிரதமர் மார்ட்டினுடனான சந்திப்பில், 19ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிய வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக பிரதமர் தெரிவித்தார். இரு நாடுகளும் திறந்த வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை நோக்கி செயல்படுகின்றன.