சிங்கப்பூர் தெரிவித்த அனுதாபம்..!!!யாருக்கு?? எதற்காக??

சிங்கப்பூர் தெரிவித்த அனுதாபம்..!!! யாருக்கு?? எதற்காக??

தைவானின் கிழக்கு கரையோரத்தில் உள்ள குவாங்ஃபு வட்டாரத்தில் “ரகாசா” என்றால் சூறாவளி வீசியதில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சூறாவளியை விட இந்த “ரகாசா” மிகவும் பலமானதாக ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இந்த சூறாவளி பிலிப்பைன்ஸ் தைவான், சீனத்தலை நிலம், வியட்நாம் ஆகியவற்றை கடந்து சென்றது.

இந்த வெள்ளப்பெருக்கில் 4 பேர் இறந்துள்ளனர். மேலும் 11 பேரை காணவில்லை.

தைவானில் உள்ள சிங்கப்பூரர்களை தொடர்பு கொண்ட போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவல் தெரிந்ததாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

தைவானில் உள்ள சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்கள் தகுந்த பயண காப்பருதியை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவானில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிங்கப்பூர் அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK