சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!!
சிங்கப்பூரில் நேற்று(ஜூலை 30) மாலை 05:50 மணியளவில் மார்சலிங் சாலையில் உள்ள HDB பிளாக் 4-இல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தை தொடர்ந்து சிவில் பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 13 வது மாடியில் உள்ள பிளாக்கின் ஒரு படுக்கை அறையிலும் ஹாலிலும் தீ எரிவதை கண்டதும் தண்ணீர் ஜெட்டுகளை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர்.
இதில் வெளியேறிய புகையை சுவாசித்ததால் மூன்று பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இத்தீவிபத்து ஏற்பட்டதற்கு காரணம், ஹாலில் இருந்த ஒரு PAB-ன் பேட்டரியாக இருக்கக்கூடும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் தீ விபத்தின் போது திடீரென வெடி சத்தம் கேட்டதாகவும் பொது மக்கள் சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பேட்டரியே தீ பிடித்து வெடித்து சிதறிருக்க கூடும் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் பொதுமக்கள் பகல் அல்லது குறிப்பாக இரவு நேரங்களில் மின் சாதனங்களை அதிக நேரம் சார்ஜ் செய்ய வேண்டாம் என்றும் மேலும் தரம் இல்லாத போலி பேட்டரிகளை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் கடந்த இரண்டு நாட்களில் HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட இரண்டாவது தீ விபத்து இது என்பதும் குறிப்பிடத்தக்கது.