சாதனை..!!கொரியாவில் வெற்றி படைத்த சிங்கப்பூர் சிங்கம்..!!!

சாதனை..!!கொரியாவில் வெற்றி படைத்த சிங்கப்பூர் சிங்கம்..!!!

சிங்கப்பூர்:தென்கொரியாவின் இக்சான் (Iksan) நகரில் நேற்று(09.11.25) நடைபெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்ட்டன் போட்டியில், சிங்கப்பூரின் ஜேசன் டே ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜப்பானைச் சேர்ந்த யுடாய் ஒகிமோட்டோவுக்கு எதிராக அவர் நேரடியான இரண்டு செட்களில் 21-14, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றிக்காக சிங்கப்பூர் பேட்மிண்ட்டன் சங்கம் தனது Instagram பக்கத்தின் மூலம் டேவை வாழ்த்தி பாராட்டியுள்ளது.

இதற்கு முன் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தாய்லாந்து மாஸ்டர்ஸ் போட்டியிலும் ஜேசன் டே வெற்றி பெற்றிருந்தார்.

இது அவரது இரண்டாவது பெரிய வெற்றியாகும்.

தற்போது உலக தரவரிசைப் பட்டியலில் 26ஆம் இடத்தில் உள்ள டே, அடுத்ததாக ஜப்பான் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்.

மேலும், டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளிலும் அவர் சிங்கப்பூரை பிரதிநிதித்துக் களம் காணவுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK