சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் தேசத்திற்கு அஞ்சலி செலுத்தி கொண்டாட்டம்..!!!

சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் தேசத்திற்கு அஞ்சலி செலுத்தி கொண்டாட்டம்..!!!

சிங்கப்பூர்: இந்த ஆண்டு(2025) சிங்கப்பூர் தனது 60 வது தேசிய தினத்தைக் கொண்டாடவுள்ளது. இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் “மஜூலா சிங்கபுரா”. இந்த கொண்டாட்டமானது படாங்கிலிருந்து மெரினா வரை விரிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கு சிங்கப்பூரர்கள் மெரினா விரிகுடாவின் நீரில் மிதக்கும் மேடை போன்று ஆழமான அனுபவங்கள் மூலம் சிங்கப்பூரின் 60 வது பிறந்தநாளை மக்கள் கொண்டாடலாம்.

இந்த மாதம் (ஆகஸ்ட்) 8 முதல் 10 வரை நடைபெறவுள்ள 60 மணி நேர புக்கிட் கோம்பாக் சமூக தேசிய தின விழாவில் 6,000 க்கும் மேற்பட்ட புக்கிட் கோம்பாக் குடியிருப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இக்கொண்டாட்ட நிகழ்வானது, இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வைத் தலைமை தாங்கியவர் லோ யென் லிங் ஆவார். இவர் வர்த்தகம், தொழில் மற்றும் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறைகளுக்கான மூத்த துணை அமைச்சரும், புக்கிட் கோம்பாக் அடிமட்ட அமைப்பின் ஆலோசகரும் ஆவார்.

இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுவது, புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் எரிக் என்ஜி, இசையமைப்பாளர் ஜஸ்டின் யாப் மற்றும் குடியிருப்பாளர் ஏபெல் லீ ஆகியோர் எழுதப்பட்ட SG60 கருப்பொருள் கொண்ட பாடல் இருந்தது. “ஒன்றாக நாங்கள் நீண்ட தூரம் வந்தோம்” என்ற பாடலின் தொடக்க வரிகளுடன் பாடல் எழுதினர்.

புக்கிட் கோம்பாக்கின் வாழ்க்கையையும் நினைவுகளையும் காட்சிப்படுத்தும் விதமாக ஒரு கலைக்கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கலை படைப்பானது 6 குடியிருப்பாளர்களால் உருவாக்கப்பட்டது.

அவர்களில் ஒருவர் தனது ஓவியங்கள் மூலமாக “லிட்டில் குயிலின்” என்ற அமைதியை வெளிப்படுத்தும் விதமாகவும் மேலும் இது சமூகத்தின் அன்றாட வாழ்க்கையையும் சித்தரிக்கும் விதமாகவும் நுட்பமாக வரைந்துள்ளார். இதன் மூலம் அவரது வீட்டின் மீதான ஆழ்ந்த பாசத்தை வெளிப்படுத்துகிறது. அந்நபரின் பெயர் அஹ்மத் கர்பானி” ஆகும்.

மற்றொரு குடியிருப்பாளரான லின் சியாஃபாங் ஒரு பிரம்மாண்டமான பின்னணியின் முன்முயற்சி மூலம் தேசியக் கொடியை உருவாக்கியுள்ளார். இந்த தேசியக் கொடியானது, சிங்கப்பூரின் 60 ஆண்டுகால ஒற்றுமையைக் குறிக்கும் விதத்தில் “60” என்ற என்னை உச்சரிக்கும் 41 தேசியக் கொடிகளைக் கொண்ட 6.16 மீட்டர் நீளமும் 13.8 மீட்டர் அகலமும் கொண்ட உருவாக்க முயற்சித்துள்ளார்.

இந்த கலைப்படைப்பு புக்கிட் கோம்பாக் சுற்றுப்புற மையத்தில் தொங்கவிடப்படும். இது வலுவான தேசபக்தி உணர்வை குடிமக்களிடையே வெளிப்படுத்தும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan