சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சிங்கப்பூரின் Mandai Lake Road பகுதியில் கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, பின்னர் சுவரில் பலமாக மோதியதில் ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் நடைபெற்றதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தின்போது வெள்ளை நிற கார் ஒன்று Mandai Lake Road-ல் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் வலதுபுறப் பாதையில் இருந்து இடதுபுறப் பாதைக்கு மாறியதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாகவும், முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தில் மோதுவதைத் தவிர்ப்பதற்காக ஓட்டுநர் காரை இடதுபுறமாக திருப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கார் சாலையோர தடுப்பில் ஏறி மோதியது. முன்னால் சென்ற வாகனத்தில் மோதுவதைத் தவிர்த்த பின்னர், கார் மீண்டும் சாலைக்குள் வந்துள்ளது.
ஆனால் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் உள்ள இரண்டு பாதைகளையும் கடந்து, எதிர்புறத்தில் இருந்த சுவரில் பலமாக மோதியுள்ளது.
மோதலின் வேகம் அதிகமாக இருந்ததால், சுவரில் மோதிய பின்னர் கார் சிறிது நேரம் பின்னோக்கி தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற 53 வயது ஆண் மற்றும் காரில் பயணம் செய்த 52 வயது பெண் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
விபத்து ஏற்பட்டபோது இருவரும் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் விரைந்து சென்றனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில், கார் சாலையில் சறுக்கியதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காரை ஓட்டிச் சென்ற 53 வயது நபர், காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.
Mandai Lake Road பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
