தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூரர்...!! பின்னணி என்ன..???
கம்போடியாவை தளமாகக் கொண்ட சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நபர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு பின்னர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
32 வயதான லீ ஜியான் ஹாவோ நேற்று (04.12.25) மலேசிய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் மீது இன்று (05.12.25) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த குற்றவியல் கும்பல் கம்போடியாவின் புனோம் பென்னில் அமைந்துள்ள மோசடி தொழில்துறை மையத்தில் செயல்பட்டதாகவும், அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூரர்களை ஏமாற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் குறைந்தது 438 மோசடி வழக்குகளில் தொடர்புடையது என நம்பப்படுகிறது.இதில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக சுமார் S$41 மில்லியன் வரை இழந்துள்ளனர்.
இவர் மீது இன்று(05.12.25)நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.