ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பித்த சிங்கப்பூர் பெண்..!! வைரலாகும் வீடியோ..!!

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பித்த சிங்கப்பூர் பெண்..!! வைரலாகும் வீடியோ..!!

சிங்கப்பூர்: காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்ய முயற்சித்த மோசடிக்காரரிடம் இருந்து சிங்கப்பூர் பெண் ஒருவர் தனது சாமர்த்தியமான பேச்சால் தப்பித்து இருக்கிறார்.இது குறித்த வீடியோவானது இணையத்தில் பரவி இணையவாசிகளிடையே பல பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் போல நடித்த ஒரு மோசடிக்காரர், மோசடி வழக்கை விசாரிப்பதற்காக ஒரு பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை கண்டுபிடித்த அந்தப் பெண் இந்த மோசடிக்காரருடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அந்த மோசடிக்காரர் தனது உரையாடல் குறிப்புகளை இழக்கும் வரை அந்தப் பெண் அவரிடம் சாமர்த்தியமாக பேசியிருக்கிறார். அதை பதிவு செய்த அப்பெண் தனது Instagram பக்கத்தில் அதனை பகிர்ந்து இருக்கிறார்.

singaporepolicese999@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ஒரு மோசடிக்காரரிடம் இருந்து அந்தப் பெண்ணுக்கு கூகுள் மீட் (Google Meet) மூலம் ஒரு வீடியோ அழைப்பு வந்துள்ளது. அது ஒரு மோசடி அழைப்பு என்பதை உணர்ந்த அப்பெண் தனது நண்பர்களிடம் நானும் என் நேரத்தை வீணடித்துக் கொண்டு இதில் பங்கேற்க வேண்டுமா என்று கேட்டுள்ளார்.

அந்த பெண் அந்த தொலைபேசிக்கு பதில் அளித்த போது அந்த மோசடிக்காரர் தான் சிங்கப்பூர் காவல் படை சேர்ந்த சாம் ஜாக் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்பு தன் கதையை மாற்றி தனது பெயர் தாமஸ் சோன் என்று வேறு ஒரு பெயரைக் கூறியுள்ளார்.

பணச்சலவைக்காக சட்ட விரோத வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதாக கோரி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக அந்தப் பெண்ணிடம் அந்த மோசடிக்காரர் விளக்கி உள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் உள்ளூர் வங்கி கணக்கு வைத்திருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார். உங்களுடைய வங்கி கணக்கு சரிபார்க்கப்படவில்லை என்றும் சரி பார்க்க வேண்டும் என்றும் மோசடிக்காரர் கூறியுள்ளார்.

அதற்கு பதில் அளித்த அந்த பெண் வேண்டும் என்றே தான் மலாயன் பேங்க்கைப் பயன்படுத்துவதாக சொல்லி இருக்கிறார். அதற்கு அந்த மோசடிக்காரர் எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் பேச்சற்று போயிருந்தார். பிறகு மீண்டும் அந்தப் பெண்ணிடம் 4 வங்கிப் பெயர்களை அந்த மோசடிகாரர் கூறியுள்ளார்.

தன்னிடம் மலேசியா வங்கிக் கணக்கு மட்டுமே இருப்பதாக அந்த பெண் கூறியபோது, மலேசியா வங்கி மட்டும் தானா? வேறு வங்கிகள் இல்லையா? என்று வற்புறுத்தி கேட்டுள்ளார்.

பின்பு அந்தப் பெண் கேமராவை இயக்க சொன்னதும் அவர் அதில் காவலர் சீருடையும், முகமூடியும் அணிந்திருந்தார். அதற்கு அந்த பெண் ஏன் முககவசம் அணிந்திருக்கிறீர்கள்? என்று கேட்டபோது நான் தலைமையகத்தில் இருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண் முகத்தைக் காட்டாத காவல்துறை அதிகாரிகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியதும் அந்த மோசடிக்காரர் தனது தொலைபேசியைத் துண்டித்து விட்டார். இந்த வேடிக்கையான வீடியோ பதிவானது இணையத்தில் வைரல் ஆகிய இணையவாசிகளை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK