சிங்கப்பூர் பெண்ணுக்கு $21,500 அபராதம் விதிப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர் பெண்ணுக்கு $21,500 அபராதம் விதிப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் உள்ள ஜூலியா நிக்கோல் மோஸ் (50) என்ற பெண் நிலத்தில் ஜூன் 2022 முதல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய பூங்காக்கள் வாரியம் ஆனது அவருடைய நிலத்தில் பல ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் மூன்று நாய்கள் வளர்க்க அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பெண் 79 செல்ல நாய்களை வீட்டில் வளர்த்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இவர் தனது செல்ல நாய்களுக்கு உரிமம் மற்றும் மைக்ரோ சிப் இருககு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறிய மனுவை விண்ணப்பிக்காமல் நிராகரித்து விட்டார்.

எனவே அதிகாரிகள் அந்த பெண்ணிற்கு தெரியாமல் அவர் வளர்த்து வந்த நாய்களை வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்தனர்.

இதை அறிந்த அந்தப் பெண் வேறு ஒரு புதிய இடத்திற்கு சென்று விட்டார். பொதுமக்கள் மூலமாக தெரிந்து கொண்ட அதிகாரிகள் வாடகை வீட்டிற்கு நாய்கள் மாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட பூங்கா வாரியம் நாயின் இருப்பிடத்தை கண்காணித்தது.

பூங்கா நிர்வாகம் நாய்களுக்கு புதிய உரிமையாளர்களை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்தது. அதையும் அந்தப் பெண் மறுத்துவிட்டார்.

இறுதியாக அந்தப் பெண் மீது அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்து மேலும் நாய்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உததரவிடுமாறு மனு கொடுத்தனர். நீதிமன்றம் ஆனது அந்தப் பெண்ணையும் அவர் வளர்க்கும் நாய்களையும் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உத்தரவிட்டது.

இதை அறிந்த அந்தப் பெண் உடனடியாக உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளார் ஆனால் மூன்று நாய்களுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டது.

வழக்கு தொடர்ந்து 28 குற்றங்கள் சுமத்தப்பட்டு இறுதியாக அந்த பெண்ணை இன்று (19ஆம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வரம்பு மீறி நாய்கள் அதிகமாக வைத்திருந்த காரணத்திற்காக நீதிமன்றம் ஆனது இவருக்கு $21,500 அபராதம் விதித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK