சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் FairPrice குழுமத்தின் பிரபலமான ‘Save Everday’ இயக்கம் மீண்டும் வந்துவிட்டது.
இந்த முறை சிங்கப்பூரின் 60 ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 100 SG60 சிறப்பு வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன.
கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட தனித்துவமான வவுச்சர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு $1,000க்கும் அதிகமான சேமிப்பை வழங்குகிறது.
இன்று முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை வவுச்சர்கள் வழங்கப்படும் என்று FairPrice தெரிவித்துள்ளது.
அவற்றை பயன்படுத்தி அரிசி, எண்ணெய், பால் மற்றும் பல அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்க பயன்படுத்தலாம்.
இவற்றில் அச்சிடப்பட்ட ரசீதுகள் கிடைக்கின்றன. FairPrice group செயலி மூலம் பயன்படுத்தக்கூடிய ரசீதுகளும் உள்ளன.
அவற்றை FairPrice, FairPrice Finest, FairPrice Xtra, Unity போன்ற கடைகளில் பயன்படுத்தலாம்.
கடந்த ஆண்டு (2024), இந்த முயற்சியின் மூலம் வாடிக்கையாளர்கள் $1.4 மில்லியனை சேமித்தனர்.
2021 ஆம் ஆண்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து இவ்வளவு பெரிய தொகை பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு FairPrice குழுமம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
