சிலாங்கூர் விபத்துக் குறித்து SNE சிங்கப்பூர் வெளியிட்ட விளக்கம்..!!!

சிலாங்கூர் விபத்துக் குறித்து SNE சிங்கப்பூர் வெளியிட்ட விளக்கம்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் பேராக்கு மாநிலம் ஈப்போவுக்குச் சென்ற நீண்ட தூரப் பேருந்து, சிலாங்கூரில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன், 28 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் அக்டோபர் 11ஆம் தேதி அதிகாலை 2.57 மணியளவில் நடந்தது.

மலேசிய ஊடகமான சைனா பிரஸ் தகவலின்படி, “சூப்பர் நைஸ்” என்ற பெயரில் இயங்கிய அந்தப் பேருந்து, பூன் லேயிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர அடையாளக் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இந்தப் பேருந்தில் மொத்தம் 29 பேர் பயணம் செய்தனர்.

விபத்தில் 59 வயதான மலேசிய நபர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 28 பயணிகள் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த Super Nice Express Pte Ltd (SNE Singapore) நிறுவனம், “இந்த பேருந்து எங்களுடையது அல்ல” என்று விளக்கமளித்துள்ளது.அதாவது, அந்தப் பேருந்து மலேசியாவின் Express Sani Budaya (M) நிறுவனம் சுயாதீனமாக இயக்கியதாக தெரிவித்தது.

மேலும், செப்டம்பர் 9ஆம் தேதி முதலே Express Sani Budaya நிறுவனத்துடன் தங்களது ஒத்துழைப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டதாகவும், ஆனால் அங்கீகாரம் இல்லாமல் “Super Nice” என்ற பெயரை தொடர்ந்து பயன்படுத்தி சேவைகள் வழங்கியதாகவும் SNE Singapore தெரிவித்தது.

நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த துயரச்சம்பவம் குறித்து மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.எங்களுக்குத் தற்போது எந்தச் செயல்பாட்டு உறவும் இல்லாவிட்டாலும், விசாரணையில் முழுமையாக ஒத்துழைப்போம்,”என்று அதன் நிர்வாக இயக்குநர் லீ ஜிங் சாங் கூறினார்.

அதே சமயம், SNE Singapore நிறுவனம் தனது வணிக நற்பெயர் மற்றும் வர்த்தக உரிமைகளைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. “சூப்பர் நைஸ்” என்ற வர்த்தக முத்திரையைப் பயன்படுத்தி வரும் Express Sani Budaya நிறுவனம் “சட்டப்படி செல்லாது” என்ற எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியதாகவும், அதற்கு எதிராக சட்டபூர்வமான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த விபத்து தொடர்பான விசாரணை மலேசிய அதிகாரிகளால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK