சிங்கப்பூர்:சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) 2026 ஆம் ஆண்டுக்கான குதிரை ஆண்டு நினைவு நாணயங்களை வெளியிட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது பொதுமக்களிடமிருந்து ஏற்கப்படுகின்றன.
ஹாங்காங் நாணய ஆணையம் (HKMA) இன்று (18.11.25) வெளியிட்ட அறிக்கையில், குதிரை ஆண்டு நினைவு நாணயங்கள் அவர்கள் வெளியிட்டுள்ள பன்னிரண்டு ராசி நினைவு நாணயத் தொகுப்பில் நான்காவது தொடரின் பத்தாவது தொகுப்பு என தெரிவித்துள்ளது.
நாணய வடிவமைப்பில் குதிரை பிரதான அம்சமாக இடம்பெற்றுள்ளது. பின்னணியில் சிங்கப்பூரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பொங்கோல் நீர்வழிப் பூங்கா (Punggol Waterway Park) இடம்பெற்றுள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் சிங்கப்பூர் தேசிய சின்னமும் “2026” ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த முறை வெளியிடப்பட்ட நினைவு நாணயங்கள் 10 விதமான பதிப்புகளில் கிடைக்கின்றன. அவற்றின் முக மதிப்பு S$2 முதல் S$200 வரை இருக்கும். இதனுடன், அழகிய நினைவு தொகுப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இன்று முதல் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை, சிங்கப்பூர் நாணயச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது தொலைபேசி எண் (6566 2626) மூலமாக ஆர்டர்கள் செய்யலாம்.
மிகுதியான ஆர்டர்கள் வந்தால், நினைவு நாணயங்கள் குலுக்கல் முறையில் (balloting) ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய நினைவு நாணயங்கள் 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் பொது விற்பனைக்குக் கிடைக்கும்.