போதைப்பொருள் குற்றத்துக்கு கடுமையான சட்டம்..!! மக்களின் வலுவான ஆதரவு..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சட்டக் கடுமை பற்றிய கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் மரண தண்டனை போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதில் மிகச்சிறந்த தடுப்பு நடவடிக்கையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
82.5% பேர், ஆயுள் தண்டனையை விட மரண தண்டனை குற்றவாளிகளைப் பயமுறுத்தும் வலுவான கருவி எனவும், போதைப்பொருள் குற்றங்களைத் தடுக்க அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், சிங்கப்பூரின் குற்றவியல் நீதி அமைப்பின் நியாயம் மீதும் பெரும்பான்மையானோர் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இதில் 79.4% பேர் குற்றவியல் நீதி அமைப்பு அனைவரையும் சமமாக நடத்துகிறது என்றும், 80.4% பேர் நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரிக்கும் போது நியாயமாக நடந்து கொள்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிங்கப்பூரில் சட்டக் கடுமையும், நீதி அமைப்பின் நியாயமும் இணைந்து சிங்கப்பூரை பாதுகாப்பில் உலகத் தரத்திற்கு உயர்த்தியுள்ளது.