சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட காணொளி பதிவானது SGRV ADMIN என்ற சமூக ஊடக பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த காணொளி பதிவில் கால்டேக்ஸ் எரிபொருள் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் காரணம் எதுவும் இன்றி திடீரென தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

காரின் முன்பக்கம் மூடிக்கு தீ வெளியேறுவது இந்த வீடியோ பதிவில் காண முடிகிறது. பிறகு எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவர் தீயணைப்பு கருவியை எடுத்து காரில் பற்றிய தீயை அணைக்க முயன்றிருக்கிறார்.

பின்னர் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரை தொடர்பு கொண்ட போது இந்த தீ விபத்தானது கடந்த செவ்வாய்க்கிழமையான மார்ச் 24ஆம் தேதி அன்று இரவு சுமார் 7:30 மணியளவில் சன் யாட் சென் சதுக்கத்திற்கு அருகே உள்ள கால்டெக்சு பெட்ரோல் நிலையத்திற்கு அருகே, 542 பாலேஸ்டியர் சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறினர்.

இந்த தீ விபத்தில் காரின் எஞ்சின் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு படையினர் தீயணைப்பான் குழாய்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

நல்ல வேளையாக இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கால்டெக்சு எரிபொருள் நிலையங்களை இயக்குகின்ற செவ் ரான் நிறுவனம் குடிமை தற்காப்பு படையின் உதவியை தீ விபத்து ஏற்பட்ட உடனேயே அழைத்த அனைத்து அவசரகால மீட்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி தீயை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தது.

மேலும் சம்பவத்தின் காரணமாக உபகரணங்களை ஆய்வு செய்வதற்காக அன்று எரிபொருள் நிலையம் சுமார் 3 மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அனைத்து உபகரணங்களும் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்த பின்னரே ஊழியர்கள் எரிபொருள் நிலையத்தை மீண்டும் திறந்தனர் என்பதை தெளிவாக எரிபொருள் நிலைய நிறுவனம் விளக்கியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK