மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்!

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஐந்து பள்ளிகள் மின்சார நுகர்வை குறைக்க, “ஸ்மார்ட் பிளக்” எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய அமைப்பை நிறுவியுள்ளன.இந்த அமைப்பு மூலம் பள்ளிகள் 8 முதல் 20 சதவீதம் வரை ஆற்றல் சேமிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனம் (SIT), செயிண்ட் ஆண்ட்ரூஸ் இரண்டாம் நிலை பள்ளி, நன்யாங் ஜூனியர் கல்லூரி, செயிண்ட் ஹில்டாஸ் இடைநிலை மற்றும் ரோசித் பள்ளி ஆகியவை தற்போது “Ecovolt” எனப்படும் ஸ்மார்ட் பிளக் அமைப்பை ஆறு மாத சோதனையாகப் பயன்படுத்தி வருகின்றன.

இந்த சாதனம் ஒரு சாக்கெட்டில் பொருத்தப்பட்டு,Wi-Fi வழியாக மின்சார நுகர்வை நேரடியாகக் கண்காணிக்கிறது. அதனால் தேவையற்ற மின் சாதனங்கள் தானாகவே அணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் 30 முதல் 120 வரை பிளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சகம் (MOE) கூறுகையில், 2031க்குள் அனைத்து பள்ளிகளும் மையப்படுத்தப்பட்ட ஆற்றல் மேலாண்மை முறைக்கு மாறும். இது விளக்குகள், குளிர்சாதனங்கள், நீர் பயன்பாடு போன்றவற்றை தானியங்கி முறையில் கட்டுப்படுத்த உதவும் என்று கூறியது.

செயிண்ட் ஆண்ட்ரூஸ் பள்ளி துணை முதல்வர் டேனி தியோ கூறுகையில், “நீண்டகால மின்சார செலவுகள் அதிகமாக இருந்ததால், எகோவோல்ட் நிறுவுவது ஒரு தேவையான முடிவு. தரவுகளின் அடிப்படையில் எவ்வளவு சேமிப்பு நடக்கிறது என்பதை அறிய ஆவலாக உள்ளோம்” என்றார்.

செயிண்ட் ஹில்டாஸ் பள்ளியில் பிளக்குகள் கணினி ஆய்வகங்களில் பொருத்தப்பட்டுள்ளன. “பள்ளியில் தற்போது, தேவையான நேரங்களில் மட்டுமே லேப்டாப் சார்ஜ் செய்வதற்கான அமைப்பு உள்ளது.இது ஆற்றலை சேமிக்க உதவுகிறது,” என பள்ளி நிர்வாகி வோங் ஹுவாட் லெங் தெரிவித்தார்.

இந்த முயற்சி மாணவர்களிடையே நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

Ecovolt நிறுவன இணை நிறுவனர் யூஜின் சியா கூறுகையில், “இது கட்டிடங்களை மட்டும் அல்ல, சமூகத்தைச் சம்பந்தப்படுத்தும் திட்டம். மாணவர்கள் நேரடியாக தரவுகளைப் பயன்படுத்தி, கார்பன் உமிழ்வை குறைப்பதின் முக்கியத்துவத்தை கற்றுக்கொள்வார்கள்,” என்றார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK