போலீசார் தெரிவித்ததாவது, விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு கார், ஒரு வேன் மற்றும் மூன்று லாரிகள் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். அதில் 56 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், 38 வயது லாரி ஓட்டுநர், 71 வயது லாரி ஓட்டுநர் மற்றும் அவரது 42 வயது பயணி ஆகியோர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
SG Road Vigilante என்ற facebook பக்கத்தில் வெளியிட்ட காணொளியில்,போக்குவரத்து சிக்னல் சிவப்பாக இருந்தபோது, ஒரு கருப்பு வேன் அதிவேகத்தில் வந்து நின்றிருந்த லாரியை மோதியது. அதனால் லாரி முன்னோக்கி தள்ளப்பட்டு, அதன் முன் இருந்த மற்ற லாரிகளுடன் மோதிய காட்சி பதிவாகியுள்ளது.
ROADS.sg வெளியிட்ட மற்றொரு காணொளியில், பல லாரிகள் மோதிய பின்னர், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது காணப்படுகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தரையில் விழ, அதன் பாகங்கள் சாலையில் சிதறியிருந்தன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததாவது,சம்பவ இடத்துக்கு சென்றபோது,இரண்டு ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் இருக்கைகளில் சிக்கியிருந்தனர். அவர்களை ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நால்வரும் பின்னர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.