சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் கொடுத்த புகார்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் கொடுத்த புகார்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியானது நடந்துள்ளது. அப்போது சிங்கப்பூரில் நடந்த நீச்சல் போட்டியின் போது சிங்கப்பூர் அண்டர் வாட்டர் ஃபெடரேஷன் பொய்யான நீச்சல் நேரம் முடிவுகளை சமர்ப்பித்ததாக சந்தேகம் எழுந்தது.

சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றமானது இது குறித்து காவல்துறையிடம் புகார் செய்தது.

காவல்துறை விசாரணையின் போது கம்போடியாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளின் போது நடைபெற்ற நீச்சல் போட்டிகளுக்கு சிங்கப்பூர் அண்டர் வாட்டர் ஃபெடரேஷனை சேர்ந்த ஆறு விளையாட்டு போட்டியாளர்கள் மன்றம் தேர்வு செய்தது.

அதில் மூன்று ஆடவர்களும் அந்த ஃபெடரேஷனை சேர்ந்த பயிற்றுவிப்பாளர்கள் என விசாரணையின் போது காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அண்டர் வாட்டர் ஃபெடரேஷனைச் சேர்ந்த போட்டியாளர்களின் பொய்யான போட்டி நேரங்களை சமர்ப்பித்ததாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இதில் மூன்று பேர் மீது போலி ஆவணங்களை சமர்ப்பித்த சந்தேகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் 33, 35, 56 வயது நிரம்பியவர்களாவர்.

இந்த குற்றத்திற்காக காவல்துறையினர் மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்ட நீதிமன்றத்தில் நாளை (12.03.26) ஆஜர்படுத்த உள்ளனர்.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK