சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனது மகளைக் மதிப்புமிக்க பள்ளியில் சேர்க்கும் நோக்கில் பொய்யான முகவரியை அளித்த 42 வயது பெண்ணுக்கு நீதிமன்றம் ஒரு வார சிறைத்தண்டனை விதித்தது. தண்டனைக்குப் பிறகு அவர் மேல்முறையீடு செய்ய விருப்பம் தெரிவித்தார்.
அந்தப் பெண் தனது மகளின் பள்ளிக்கு அருகில் வசிப்பதாகக் கூறி, வாடகைதாரர்களிடம் பொய் சொல்லச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பொது அதிகாரிகளுக்கு தவறான தகவல்கள் மற்றும் தவறான முகவரி அளித்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நீதிபதி, கல்வி அமைச்சின் சேர்க்கை அமைப்பு வெளிப்படையாகவும் நியாயமான முறையிலும் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற ஏமாற்றங்கள் சமூக நம்பிக்கையையும் மதிப்புகளையும் பாதிக்கின்றன என்றும் கூறினார்.
பொய்யான முகவரி மூலம் பிரதிவாதி தனது மகளுக்கான முன்னுரிமை சேர்க்கையை பெற்றதாகவும், இதனால் தகுதியுள்ள பிற குழந்தைகள் வாய்ப்பை இழந்திருக்கக்கூடும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.