தவறான நடத்தை…!! இளைஞரின் எதிர்காலம் கேள்விக்குறி..!

தவறான நடத்தை…!! இளைஞரின் எதிர்காலம் கேள்விக்குறி..!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பதின்ம வயது இளைஞர் ஒருவர் 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கிடையில் 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளை வெவ்வேறு நேரங்களில் சந்தித்து, அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது 19 வயது நிறைவடைந்துள்ள அவர், குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நேற்று(23.02.26) நிரூபிக்கப்பட்டார்.

வயது குறைந்த சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன. சில குற்றங்கள் அவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தபோது நடைபெற்றதால், அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

2022 ஏப்ரல் 14ஆம் தேதி, உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாடிப்படியில் 13 வயது சிறுமியுடன் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கண்ட பொதுமக்களில் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போதும், அவர் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2023 பிப்ரவரியில், சமூக ஊடக செயலியின் மூலம் 14 வயது சிறுமியுடன் தொடர்பு கொண்டு, அவருடன் இரு முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. பின்னர் அந்த சிறுமி போலீசில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, 2023 ஜூலை 13ஆம் தேதி, காணொளி ஒன்று குறித்து கேள்வி கேட்க ,14 வயதான சிறுவன் ஒருவரைச் சந்திக்க அவர் பள்ளிக்கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், பின்னர் அந்தச் சிறுவனை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. வெளியேற முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

வழக்கறிஞர்களின் கோரிக்கையின்படி, நன்னடத்தை உத்தரவு மற்றும் சீர்திருத்தப் பயிற்சிக்கு அவர் தகுதியானவரா என்பதை மதிப்பிட அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிபதி கேரல் லிங் உத்தரவிட்டார். அந்த இளைஞர் தற்போது ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏப்ரல் 22ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK