திடீரென மயங்கிய டாக்ஸி ஓட்டுநர்..!! பயணிகளின் நிலை என்ன..??
சிங்கப்பூரில் மார்ச் 16ஆம் தேதி கார் தஞ்சோங் ரூ சாலை, மேயர் ரோடு மற்றும் போர்ட் ரோடு சாலையின் சந்திப்பில் கிராப் டாக்ஸி ஒன்று டிரைவர் மயங்கிய காரணத்தினால் நிலை தடுமாறியது.
இந்த சம்பவமானது இரவு 09:30 மணி அளவில் நடந்தது.
டாக்ஸி டிரைவர் இரண்டு பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விட்டார் இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த போக்குவரத்து விளக்கு கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்தது அடுத்த சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரும் காவல்துறையும் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இந்த விபத்து குறித்து காரில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். காரின் உடைய பின் இருக்கையில் நண்பருடன் அமர்ந்திருந்த நிலையில் கார் ஓட்டுநர் தொடர்ந்து இருமலால் சிரமத்திற்கு ஆளாகினார். சாலை சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தபோது வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர் மூச்சுவிட தடுமாறியதை கண்டதாக பதிவிட்டிருக்கிறார்.
இதனை அடுத்து, திடீரென சில அடிகள் காருக்கு முன் சென்று ஓட்டுனர் சுயநினைவை இழந்ததாக தெரிவித்திருந்தார். உன்னை நீ அருகில் இருந்த நண்பர் ஓட்டுனரின் முதுகில் தட்டியபோது விழித்துக் கொண்டார்.
ஆனாலும் ஓட்டுநர் அவருடைய சுயநினைவு இழந்த காரணத்தினால் காரின் வேகம் அதிகம் ஆகி கார் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் 66 வயதான டாக்ஸி ஓட்டுனர் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையின் விசாரணைக்கு பதில் அளித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிராப் ஓட்டுனருக்கு கிராப் நிறுவனம் உதவி வருவதாக தெரிவித்திருக்கிறது.