சுகாதார அறிவியல் ஆணையம் கொடுத்த எச்சரிக்கை..!! எதற்கு..??
சிங்கப்பூரில் குறிப்பிட்ட சில மூலிகை மறந்து தயாரிப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பயன்படுத்துபவர்களை சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது.
காரணம் என்ன? அந்த மருந்துகளில் கடமையான எதிர்மறை விளைவுகளையும் சிறுநீரகங்களை பாதிக்கும் மூன்று விதமான மூலப்பொருள்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவியல் ஆணையம் ஆனது இன்று நவம்பர் 19ஆம் தேதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சோதனையின் போது தெரியவந்தது என்ன? மூலிகை மருந்தில் இரண்டு சக்திவாய்ந்த ஸ்டிராய்டு என்னும் ஊக்க மருந்தும் வீக்கத்தை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணையும் கலந்திருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் ஆனது உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த மூலிகை மருந்தை உட்கொண்ட சில பேருக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு குஷிங்ஸ் சிண்ட்ரோம் எனும் ஹார்மோன் சமநிலை இன்மையால் ஏற்படும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தங்களுக்கு புகார்கள் வந்தது என ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இரண்டு நபர்கள் இந்த மூலிகை மருந்தை எடுத்துக் கொண்டதால் மருத்துவமனையில் நவம்பர் மாதம் அனுமதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.