சிங்கப்பூர் - மலேசியா இடையே நடந்த திருட்டு சம்பவம்..!!
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு வாகனங்களை கடத்திய சம்பவமானது கடந்த ஆண்டு (2025 ஆம் ஆண்டு) அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்துள்ளது.
மார்ச் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் கிட்டத்தட்ட 33 முதல் 60 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் 10 பெரும் பெண்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவற்றில் நான்கு வாகனங்கள் சிங்கப்பூரில் திருடப்பட்டு மலேசியாவுக்கு கொண்டுவரப்பட்டதாகும். மேலும் விசாரணையின் போது எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்கு வகை செய்வதற்காக மலேசிய காவல்துறை சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து செயல்படும்.
மலேசியாவைச் சேர்ந்த முகமது மசூவான் பின் அப்துல்லா (39) மீது மூன்று திருட்டு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவர் திருடிய வாகனங்களின் மொத்த மதிப்பானது $8,900.
இவர் தொடர்புடைய மேலும் சில நபர்கள் சேர்ந்த கும்பல் வாகனங்களின் அடையாளங்கள் ஆவணங்கள் ஆகியவற்றை மாற்றி சந்தையில் புதிதாக விற்பனை செய்யப்படுவதாக மலேசிய ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மசுவான், மற்றொரு மலேசியா நபரான அப்துல்லா அப்பாஸ் முகமது அர்பா ஆம்(30), சிங்கப்பூரைச் சேர்ந்த டெர்ரி டோ ஹூவாட்(53) ஆகியோருடன் இணைந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடந்த இந்த குற்ற செயல்களுக்காக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரணைக்காக, மசுவான் மார்ச் 23 அன்று திருட்டு நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் மீதான வழக்கானது மீண்டும் மார்ச் 31ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.