பிரிட்டனுக்குள் நுழைய இனி இது கட்டாயம் தேவை..!!

பிரிட்டனுக்குள் நுழைய இனி இது கட்டாயம் தேவை..!!

பிரிட்டனுக்கு பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு..!!
பிரிட்டனுக்கு பயணம் செய்பவர்கள் இன்று முதல் (பிப்ரவரி 25) மின் இலக்க பயண அனுமதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பயண அனுமதி சீட்டை பெறுவதற்கு இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

மின் இலக்க பயண அனுமதிக்கும் கட்டணம் 16 பவுண்டு($27) ஆகும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 85 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இந்த அனுமதி சீட்டு கட்டாயம் ஆகும்.

சிங்கப்பூர் பயணிகளுக்கு இந்த ஏற்பாடு ஏற்கனவே சென்ற ஆண்டிலிருந்து நடப்பில் உள்ளது.

பிரிட்டனுக்குள் நுழையும் முன்பாகவே மின் இலக்க பயண அனுமதி சீட்டை பயணிகள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

மின் இலக்க பயண அனுமதி சீட்டு இல்லாத பயணிகளுக்கு பிரிட்டன் செல்லும் விமானங்களில் ஏறுவதற்கே அனுமதி மறுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் பிரிட்டிஷ் அயர்லாந்து குடிமக்கள் அல்லது பிரிட்டனில் நிரந்தரமாக வசிப்பவர்கள் கட்டணத்தை செலுத்த தேவையில்லை.

பிரிட்டனின் எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த மின் இலக்க பயண அனுமதி சீட்டு மிகவும் அவசியமான ஒன்றாகும் என அந்நாட்டினுடைய குடிநுழைவு அமைச்சர் மைக் டாப் கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK