சிங்கப்பூரில் வரும் வாரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் வரும் வாரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் வரும் வாரங்களான ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மலேசியாவிற்கு சோதனை சாவடிகள் வழியாக செல்லும் பயணிகளுக்கு கடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

புனித வெள்ளி, சிங் மிங் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு அனைத்து சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு சோதனைகளை தடுத்து வைப்பதாக குடிநுழைவு சோதனை சாவடி ஆணையம் (LTA) மார்ச் 30 ஆன இன்று கூறியுள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனை சாவடிக்கு அருகில் மறு மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக தற்போது கட்டுமான சாலை பணிகள் நடப்பதாகவும் LTA கூறியது.

நிலவழி சோதனை சாவடிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்ப்பதற்காக வாகனம் ஓட்டுவதற்கு பதிலாக பேருந்து சேவைகளை பயன்படுத்துமாறு பயணிகளுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

கடந்த மார்ச் 13ஆம் தேதிக்கும் மார்ச் 22ஆம் தேதிக்கும் இடையே உள்ள காலகட்டத்தில் மார்ச் பள்ளி விடுமுறை நோன்பு பெருநாள் வார இறுதியின் போது உட்லண்ட்ஸ் துவாஸ் சோதனை சாவடிகளை கிட்டத்தட்ட ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்து சென்றுள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.

அதே காலகட்டத்தில் கார்களில் பயணம் செய்தோர் குடிநுழைவை கடந்து செல்ல சுமார் 3 மணி நேரம் காத்திருந்ததாகவும் ஆணையம் தெரிவித்திருக்கிறது. கடந்த மார்ச் 18 ஆம் தேதி போக்குவரத்து அதிகமாக நெரிசல் ஏற்பட்டது. அன்று குடிநுழைவை 564,000 -க்கும் அதிகமான பயணிகள் கடந்து சென்றதாக ஆணையம் தெரிவித்திருந்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK