கனமழை எதிரொளி...!!முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு...!!
சிங்கப்பூர்: இன்று,காலை (21.07.25) சிங்கப்பூரின் தெற்கு,கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த கனமழையால் பல சாலைகளில் திடீரென வெள்ளநிலை ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தால் வாகன ஓட்டுநர்கள் கடுமையான போக்குவரத்து சிக்கல்களுக்கு ஆளாகினர்.
Public Utilities Board (PUB) இன்று காலை 11 மணியளவில் தனது X தளத்தில் அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டு,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது.
வெள்ளம் ஏற்பட்ட முக்கிய இடங்களில் Boon Keng, Bendemeer, Jalan Besar, Bukit Timah மற்றும் Upper Thomson போன்ற பகுதிகள் அடங்கும்.
குறுகிய நேரத்தில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சாலைகள் முடக்கப்பட்டன.
வாகன ஓட்டுநர்கள் தாழ்வான பகுதிகளில் செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
நகராட்சியினர் சுத்திகரிப்பு மற்றும் நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மழை தொடர்ந்து பெய்யக்கூடிய சூழ்நிலை நிலவுவதால், பொது மக்கள் அரசு வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டியது முக்கியமாகும்.