உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசல்..!!! காரணம் என்ன..??
புக்கிட் திமா விரைவுச் சாலையில் உட்லண்ட்ஸ் சோதனை சாவடிக்கு செல்லும் வழியான எக்ஸிட் 10B அருகில் ஒரு சாலை விபத்து இன்று (மார்ச் 10) காலை 10 மணி அளவில் விபத்து ஏற்பட்டது.
இதனால் இரண்டு பாதைகளுக்கும் இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. இது குறித்த குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதன் பிறகு காலை 10:39 மணியளவில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்ததாக அதிகாரிகள் மற்றொரு அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
தற்போது என்ன நிலவரம் என்று தெரிந்து கொள்ள checkpoint.sg என்ற மொபைல் செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இன்று(மார்ச் 10) காலை 11:30 மணி நிலவரப்படி, ஜோகூர் பாருவில் இருந்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியே சிங்கப்பூருக்குள் வருபவர்கள் காண காலதாமதம் 30 முதல் 50 நிமிடங்கள் வரையும் சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்கு செல்பவர்களுக்கான காலதாமதமானது 50 முதல் 80 நிமிடங்கள் வரையும் இருந்தது.