மார்ச் 14 முதல் 17 வரை ரயில் சேவை நிறுத்தம்..!! எந்தெந்த வழிகள்..??

மார்ச் 14 முதல் 17 வரை ரயில் சேவை நிறுத்தம்..!! எந்தெந்த வழிகள்..??

சிங்கப்பூர்: கிழக்கு – மேற்கு பாதையில் தானா மேராவில் இருந்து எக்ஸ்போ நிலையம் வரையில் உள்ள ரயில் சேவைகள் ஆனது இடைநிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ விவரங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (மார்ச் 12) பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த இடைநிறுத்த நேரத்தில் கிழக்கு கடற்கரை ஒருங்கிணைந்த டிப்போவில் தண்டவாள பணிகளை மேம்படுத்துவதற்காகவும், பயணங்களை எளிதாக்குவதற்கும் வேலைப்பாடு நடக்க உள்ளது.

இந்த இடைநிறுத்த காலகட்டத்தில் பயணிகள் பயணத்தை எளிதாக்குவதற்கு தற்காலிகமாக ஒரு புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அதிகாரிகள் வழங்கியுள்ள ஷட்டில் பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம்.

📌எக்ஸ்போ மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு இடையேயான ஒவ்வொரு ஏழு நிமிடத்திற்கும் ஒரு ஷட்டில் ரயில் தேவையானது இயக்கப்படும்.

📌தானா மேரா மற்றும் எக்ஸ்போ இடையேயான S8 ஷட்டில் பேருந்து சேவையானது ஒவ்வொரு ஐந்து முதல் 8 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்படும்.

மேலும் பயண தாமதங்களை குறைப்பதற்காக பிற MRT வழிப்பாதைகளில் செல்லும் வழக்கமாக பேருந்து சேவைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் நிலப்பக்குவரத்து ஆணையம் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது. தற்போது இடைநிறுத்தப்படும் பகுதிகளில் மாற்று வழி பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மேற்கு பாதைக்கும் சாங்கி டிப்போ விற்கும் இடையிலான இணைப்பு பாதைகள் இடிக்கப்பட்டது அதன் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவ்விடத்தில் கிழக்கு கடற்கரை ஒருங்கிணைந்த டிப்போ செயல்பட தொடங்கும் என்பதை குறிப்பிட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK