துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!!

Add Your Heading Text Here

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!!

சிங்கப்பூர்:துவாஸ் சோதனைச் சாவடியில் அழகுசாதனப் பொருட்களாக அறிவிக்கப்பட்ட 22,000-க்கும் மேற்பட்ட மின்-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு மலேசிய ஓட்டுநர்களும் அவர்களது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு சோதனைச்சாவடி ஆணையம் நேற்று (19.02.26) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்ததாவது,இந்த மாதம் 2ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது துவாஸ் சோதனைச் சாவடியில் சட்ட அமலாக்க அதிகாரிகள் அதைத் தடுத்து நிறுத்தினர்.

மேலும் சோதனை செய்தபோது, 22,000-க்கும் மேற்பட்ட மின்-சிகரெட்டுகள் மற்றும் அவற்றின் தொடர்புடைய உதிரிப் பாகங்கள், அதோடு 14,000-க்கும் மேற்பட்ட சூடான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தது.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 28 மற்றும் 21 வயதுடைய இரண்டு மலேசிய நபர்களும் அவர்களுடன் வந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK