சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்படுபவர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?
நாம் நேற்றைய பதிவில் சிங்கப்பூர் வேலைக்கு செல்பவர்கள் சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே எதனால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்று பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று சிங்கப்பூரில் எங்கே திருப்பி அனுப்பப்படுவர்கள், என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். அதே போல் என்ன செய்யக்கூடாது என்றும் பார்ப்போம்.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் நீங்கள் திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் உங்களின் கைரேகை மற்றும் புகைப்படத்தை எடுத்துக் கொள்வார்கள். அங்கிருந்து திருப்பி வரும் பொழுது உங்களுடைய ஏஜெண்டோ அல்லது நீங்களோ விமான டிக்கெட்டை உங்கள் சொந்த செலவில் பதிவு செய்து வர வேண்டும். அதேபோல் நீங்கள் உங்களது விமான டிக்கெட்டை பதிவு செய்ய தவறினாலோ தாமதம் ஆனாலோ அங்கே நீங்கள் தங்கி இருப்பதற்கான செலவையும் ஏற்க வேண்டும்.
நீங்கள் அங்கிருந்து திரும்பி வரும் பொழுது விமான நிலைய அதிகாரிகள் உங்களிடம் ஒரு QR Code தருவார்கள். அதன் பெயர் 14 A form ஆகும். நீங்கள் இந்தியா வந்த பிறகு இந்த படிவத்தை பூர்த்தி செய்து ICA விற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு அனுமதி வந்தால் மட்டுமே உங்களால் திருப்பி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். இல்லையென்றால் நிச்சயமாக உங்களால் சிங்கப்பூருக்குள் செல்ல முடியாது.
வருடங்களுக்குப் பிறகு வேறு ஒரு முகவர் மூலமாக அல்லது ஏஜெண்டுகள் மூலமாக பணத்தை செலுத்தி வேலை அனுமதியை பெற்று விடலாம் என்று நினைத்து சிங்கப்பூர் செல்லலாம் என்று நினைத்து செல்கிறார்கள். ஆனால் அவர்களும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
மனிதவள அமைச்சிலிருந்து(MOM) உங்களுக்கு அனுமதி கிடைத்து விடும். ஆனால் சிங்கப்பூர் இமிகிரேஷனில் இருந்து உங்களுக்கு அனுமதி மறுக்கப்படும். ஏனென்றால் நீங்கள் அந்த படிவத்தை பூர்த்தி செய்து சிங்கப்பூர் இமிகிரேஷனில் அனுமதி பெற தவறியது காரணம் ஆகும்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், சிங்கப்பூர் மனிதவள அமைச்சு (MOM) என்பது வேறு சிங்கப்பூர் இமிகிரேஷன் என்பது வேறு ஆகும். எனவே நீங்கள் 14 ஏ படிவத்தை பூர்த்தி செய்யாமல் ICA- வில் அனுமதி வாங்காமல் சிங்கப்பூர் செல்ல முடியாது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து நமது sgtamilan இணைய பக்கத்தில் இணைந்து இருந்தால் இதுபோன்ற பலருக்கும் தேவைப்படும் தகவல்களைப் பற்றியும் சிங்கப்பூர் செய்திகளை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.