அசத்தல்..!!சிங்கப்பூர் மாணவர்கள் உருவாக்கிய ரோபோ...!!! என்ன ஸ்பெஷல்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இரண்டு உள்ளூர் தொடக்கப் பள்ளி மாணவர்கள், ஆரோக்கியமான திரை பயன்பாட்டை ஊக்குவிக்கும் புதிய ரோபோவை உருவாக்கியுள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்பு விரைவில் உலக அரங்கில் காட்சியளிக்க உள்ளது.
இந்த கண்டுபிடிப்பை குவாங்டாவ் தொடக்கப் பள்ளியில் படிக்கும் ஒன்பது வயது மாணவர்கள் எலோன் சான் மற்றும் ஸ்கைலார் சுவா, நவம்பர் 26 முதல் 28 வரை சிங்கப்பூரில் நடைபெறும் உலக ரோபோ ஒலிம்பியாட் (WRO) இறுதிப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.
“எதிர்கால கண்டுபிடிப்பாளர்கள்” பிரிவில் பங்கேற்கும் இவர்களின் “RoboBuddy” ரோபோ, நீண்ட நேரம் திரை பயன்படுத்துவதால் ஏற்படும் சோர்வைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தை மற்றும் திரையின் இடையிலான தூரத்தை உணர்ந்து, ஆரோக்கியமான பார்வை தூரத்தை தானாக பராமரிப்பதே இதன் சிறப்பம்சம்.
ரோபோவில் சென்சார்கள், சக்கரங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் ஸ்டாண்ட் ஆகியவை உள்ளன. குழந்தை திரைக்கு மிக அருகில் சென்றால், ரோபோ அசைவை உணர்ந்து பின்னால் நகரும்.
மேலும், பெற்றோர்கள் திரை நேர வரம்பையும் பார்வை தூரத்தையும் நிர்ணயிக்க அனுமதிக்கும் செயலி ஒன்றையும் மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.
“ரோபோக்களை உருவாக்குவது எப்போதும் எங்களுக்குப் பிடித்த ஒன்று.இந்த ரோபோ குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழக்கத்தை கற்பிக்கும் என்று நம்புகிறோம்,” என ஸ்கைலர் பெருமையுடன் கூறினார்.